நந்தகுமாரைக் குறிவைத்து SPRM கைது செய்ததா? பாஸ் கட்சி கேள்வி!

- Sangeetha K Loganathan
- 02 Mar, 2025
மார்ச் 2,
லஞ்சம் கேட்டதாக மலேசியா கினி ஊடகவியலாளர் நந்தகுமார் கைது செய்யப்பட்டிருப்பதற்குப் பின்னணியில் முக்கிய புள்ளிகள் இருப்பதாகப் பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார். முக்கியமாக SPRM நடத்திய முந்தைய சோதனைகள் தொடர்பாகச் சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளர் கட்டுரைகளை விரிவாக எழுதியதால் அவரை SPRM குறி வைத்து கைது செய்துள்ளதாகவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளார் Datuk Seri Takiyuddin Hassan.
முன்னதாக விமான நிலையத்தில் போலி கடப்பிதழ்களுடன் அரசு அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தையும், அரசியல் தலைவருக்கு நெருக்கமானவர்கள் வீட்டிலிருந்து 1 மில்லியனுக்கும் மேலானப் பணம் பறிமுதல் செய்ததாகவும் வெளிவந்த செய்திகளில் SPRM-க்கு எதிராகக் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டிருப்பதற்கானப் பின்னனியில் SPRM ஈடுபட்டுள்ளதா எனும் கேள்வியையும் Datuk Seri Takiyuddin Hassan முன்வைத்துள்ளார்.
PAS mempersoalkan penahanan wartawan MalaysiaKini Nandakumar oleh SPRM. Mereka mendakwa ia mungkin bermotifkan dendam susulan laporannya mengenai siasatan terdahulu SPRM. Takiyuddin Hassan turut mengaitkan isu ini dengan kes pegawai kerajaan dan ahli politik tertentu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *