பாஸ்போர்ட்களைப் பதுக்கிய குடிநுழைவுத் துறை அதிகாரி கைது! – KLIA விமான நிலையம்!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
KLIA விமான நிலையத்தில் உள்ள குடிநுழைவுத் துறை அதிகாரியிடமிருந்து 12 வெளிநாட்டுப் பாஸ்போர்ட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் சம்மந்தப்பட்ட குடிநுழைவுத் துறை அதிகாரியைக் கைது செய்துள்ளதாகத் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட அதிகாரி 12 பாஸ்போர்ட்களைத் தனது உடலில் மறைத்து வைத்ததிருப்பதை CCTV காணொலியில் தெரிய வந்ததாகவும் சோதனையில் அவரிடமிருந்த 12 பாஸ்போர்ட்களையும் பறிமுதல் செய்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டினர்களைச் சோதனையிடும் பிரிவின் அதிகாரியானக் கைது செய்யப்பட்ட அதிகாரி சந்தேகக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மீதான விசாரணைக்குப் பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தேசிய குடிநுழைவுத் துறை இயக்குநர் Datuk Zakaria Shaaban விளக்கமளித்தார்.
Seorang pegawai Imigresen di KLIA ditahan selepas didapati menyembunyikan 12 pasport warga asing pada tubuhnya. CCTV merakam perbuatannya dan siasatan lanjut sedang dijalankan. Pegawai tersebut kini ditahan untuk siasatan lanjut sebelum tindakan selanjutnya diambil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *