முன்னாள் பிரதமருடன் தொடர்புடைய 4 அதிகாரிகள் ஊழல் வழக்கில் கைது! – SPRM

top-news

பிப்ரவரி 23,

முன்னாள் பிரதமரின் சிறப்பு அதிகாரிகளாக இருந்த 4 பேரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளதாக வெளிவந்த செய்தி உண்மை தான் என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று உறுதிப்படுத்தினார். நாட்டின் ஒன்பதாவது பிரதமரான Dato' Sri Ismail Sabri Yaakob பிரதமராக இருந்த போது அவருடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில், அது Dato' Sri Ismail Sabri bin Yaakob தொடர்புடையவர்களா என்பதைத் தற்போது உறுதிப்படுத்த முடியாது என Tan Sri Azam Baki தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட நால்வரையும் 3 நாள்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க Putrajaya நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர்கள் MACC சட்டப்பிரிவு 16a சட்டத்தின் கீழ் விசாரணை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் விசாரணைக்குப் பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்றும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

SPRM mengesahkan penahanan empat bekas pegawai khas kepada bekas Perdana Menteri atas kes rasuah. Mereka ditahan selama tiga hari untuk siasatan SPRM. Bagaimanapun keterlibatan Dato' Sri Ismail Sabri Yaakob belum dapat dipastikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *