பள்ளிச் சிறுவனை மோதிய சொகுசு கார்!

top-news

மார்ச் 2,


பள்ளி மாணவர்கள் சாலையைக் கடக்கும் போது வாகனமொன்று மாணவரை மோதும்படியானக் காணொலி சமூகவலைதலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட வாகனமோட்டியைக் கைது செய்துள்ளதாக Sungai Buloh மாவட்டக் காவல் ஆணையர் Hafiz Muhammad Nor தெரிவித்தார். இச்சம்பவம் Subang Bestariயில் 12.15 மணிக்கு நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

மாணவர்கள் கும்பலாகச் சாலையைக் கடக்கும் போது பாதுகாவலர் வாகனங்களை நிறுத்தும்படியும் மற்ற வாகனங்கள் நிறுத்திய நிலையில் 66 வயது ஆடவர் செலுத்திய Range Rover வாகனம் நிறுத்தாமல் மாணவரை மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்காக 66 வயது வாகனமோட்டி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக Sungai Buloh மாவட்டக் காவல் ஆணையர் Hafiz Muhammad Nor தெரிவித்தார்.

Seorang pelajar sekolah dilanggar oleh sebuah kenderaan mewah ketika melintas jalan di Subang Bestari. Polis menahan pemandu lelaki berusia 66 tahun yang memandu Range Rover tanpa berhenti. Mangsa kini menerima rawatan di hospital dan siasatan masih dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *