மலையேறும் போது வெளிநாட்டுச் சுற்றுலா பயணி மரணம்!

top-news

பிப்ரவரி 26,


கினாபாலு மலையேறும் நடவடிக்கையின் போது பிரிட்டிஷைச் சேர்ந்த சுற்றுலா பயணி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.17 மணிக்கு மலையேறும் கும்பலிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாகவும் 8 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து மீட்பு அதிகாரிகள் உயிரிழந்தவரின் உடலை மீட்டதாகவும் Ranau மாவட்ட மீட்பு ஆணையத்தின் அதிகாரி Ridwan Mohd Taib தெரிவித்தார். 


உயிரிழந்தவர் 70 வயதுடைய பிரிட்டிஷ் நாட்டுச் சுற்றுலா பயணி என அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அவரின் சுற்றுலா பயணக் குழுவைச் சேர்ந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மலையின் உச்சியை அடைந்து மீண்டும் மலையிலிருந்து இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Seorang pelancong warga Britain berusia 70 tahun meninggal dunia ketika menuruni Gunung Kinabalu selepas mengalami sesak nafas. Pasukan penyelamat menerima panggilan kecemasan dan menemui mayatnya pada ketinggian 8 km. Polis sedang menyiasat kejadian tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *