டீசல் கடத்திய 2 லாரி ஓட்டுநர்களுக்கு அபராதம்!

top-news

பிப்ரவரி 27,

கடந்த ஆண்டு முறையான ஆவணங்கள் இல்லாமல் லாரிகளில் டீசலைக் கடத்திய 2 லாரி ஓட்டுநர்களுக்கு Sesyen நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 26 வயதான Kuah Kar Weng தனது லாரியில் 2,202 லிட்டர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக RM15,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் 45 வயதான Goh Sey Sim தனது லாரியில் 1,507 லிட்டர் டீசலைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக RM10,000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீசலைப் பதுக்கிய இரு லாரி ஓட்டுநர்களும் தங்கள் மீதானக் குற்றத்தை மறுக்காமல் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அபராதம் மட்டும் விதிப்பதாகவும் அபராதத்தைச் செலுத்த தவறினால் 26 வயதான Kuah Kar Weng-க்கு 5 மாதங்கள் சிறையும் 45 வயதான Goh Sey Sim-க்கு 3 மாதங்கள் சிறையும் விதிக்கடும்படியும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dua pemandu lori didenda selepas mengaku bersalah menyeludup diesel tanpa dokumen sah. Kuah Kar Weng didenda RM15,000 kerana menyimpan 2,202 liter diesel manakala Goh Sey Sim didenda RM10,000 bagi 1,507 liter. Gagal membayar denda boleh mengakibatkan hukuman penjara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *