இபிஎப் பணத்தை முன்னமே செலவிட்டால் ஓய்வு பெறும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5-

குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன்னதாகவே ஊழியர் சேம நிதி வாரிய பங்களிப்பாளர்கள் தங்களது சேமிப்பை பயன்படுத்தும் நடவடிக்கை ஓய்வுப் பெறும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

முதுமை காலத்திற்காக இபிஎப்பின் சேமிப்பு இருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன்னதாக தாம் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் இருந்தே அதிலிருந்து பணத்தை மீட்டுக் கொள்ள தளர்வு வழங்கப்படவில்லை என்று பிரதமர்டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“பெரும்பாலான பங்களிப்பாளர்கள் குறிப்பாக, மலாய் சமுதாயத்தினர் மிகச் சிறிய அளவிலான சேமிப்புகளைக் கொண்டுள்ளதாக ஊழியர் சேம நிதி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு வழங்குவதால், சில ஆண்டுகளில் ஓய்வு பெறும் போது சிக்கலை ஏற்படுத்தும்," என்றார் அவர்.

நேற்று மக்களவையில், வேலை இழந்தவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக இபிஎப் சேமிப்பை பயன்படுத்திக் கொள்ளும் பரிந்துரை குறித்து பாடாங் தெராப் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் அமின் ஹமிட் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இப்ராஹிம் அவ்வாறு பதிலளித்தார்.எனினும், தற்போது உள்ள இபிஎப்பின் விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டாலும் அவசர தேவைகளை மட்டும் இபிஎப் பரிசீலிக்க முடியும் என்று நிதி அமைச்சருமான அவர் கூறினார்.

Perdana Menteri Anwar Ibrahim menegaskan pengeluaran awal simpanan KWSP boleh menjejaskan persaraan. Beliau menolak kelonggaran pengeluaran sejak menjadi Menteri Kewangan, memandangkan majoriti penyumbang, terutama Melayu, memiliki simpanan kecil. Namun, KWSP boleh mempertimbangkan kes kecemasan tertentu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *