Cryptocurrency மோசடியில் RM86,200 இழந்த மருத்துவ ஊழியர்!

top-news

மார்ச் 5,

டிஜிட்டல் நாணயமான Cryptocurrency மூலமாக RM86,200 இழந்த 39 வயதான மருத்துவ ஊழியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார். Cryptocurrency மூலமாக அதிகமான லாபத்தைப் பெறலாம் என எண்ணி சம்மந்தப்பட்ட பெண் மருத்துவ ஊழியர் முதலீடு செய்ததாகவும் லாபப் பணத்தைப் பெற விரும்பும்போது முன்பணமாக அமேரிக்க டாலர் USDT35,146.60 செலுத்தும்படி வலியுறுத்தியதாகவும் நேற்று மாலை 4.16 மணிக்குக் கோலா திரங்கானு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

முதற்கட்ட விசாரணையில் சம்மந்தப்பட்ட முதலீட்டு நிறுவனம் போலியானது என்றும் சம்மந்தப்பட்ட Cryptocurrency நிறுவனக் கணக்குகளும் போலியானது என்றும் தெரிய வந்துள்ள நிலையில் இணைய பாதுகாப்பு ஆணையத்தின் மூலமாகச் சம்மந்தப்பட்ட முதலீட்டு இணைப்புத் துண்டிக்கப்பட்டதாகவும் கோலா திரங்கானு மாவட்டக் காவல் ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.

Seorang pegawai perubatan berusia 39 tahun mengalami kerugian RM86,200 akibat penipuan pelaburan cryptocurrency. Mangsa membuat laporan polis setelah diminta membayar pendahuluan untuk mengeluarkan keuntungan. Siasatan mendapati syarikat pelaburan tersebut palsu dan laman webnya telah disekat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *