சுகாதாரமற்ற தீவை மூடிய பினாங்கு நகராண்மைக் கழகம்!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
பினாங்கில் உள்ள பூலாவ் TIKUS சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட பகுதியை 14 நாள்களுக்கு மூடுவதாகப் பினாங்கு நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. பினாங்கின் பிரபலச் சுற்றுலா தலமான PULAU TIKUS பகுதியில் இயங்கி வந்த உணவு வளாகங்கள் தூய்மையாக இல்லாததால் துர்நாற்றம் வீசுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்ப உணவகத் தலம் இருக்கும் பகுதியை அடுத்த 14 நாள்களுக்கு முழுமையாக மூடவும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் பினாங்கு நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
எலிகள், பூச்சிகள், கரப்பான் பூச்சிகள் உயிரிழந்த நிலையில் சம்மந்தப்பட்ட உணவகங்கள் முறையாகவும் சுத்தமாகவும் இல்லாததால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட உணவுக் கடைகளின் உரிமையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் முழுமையானத் துப்புரவு பணிகளை மேற்கொண்ட பின்னர் பினாங்கு நகராண்மைக் கழகம் மீண்டும் ஆய்வை நடத்தும் என்றும் பாழடைந்த நிலையில் காணப்படும் உணவுக் கடைகளின் உரிமத்தை ரத்து செய்வதாகவும் பினாங்கு நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
Majlis Bandaraya Pulau Pinang (MBPP) telah menutup kawasan Pulau Tikus selama 14 hari berikutan keadaan kebersihan yang tidak memuaskan. Keputusan ini dibuat selepas aduan bau busuk dan penemuan tikus serta lipas di kawasan premis makanan. Pembersihan menyeluruh akan dilakukan sebelum penilaian semula dibuat oleh pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *