கடத்தல் கும்பலைச் சேர்ந்த 27 பேர் கைது! RM35.28 மில்லியன் மதிப்புள்ள பொருள்கள் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 03 Mar, 2025
மார்ச் 3,
கடந்த 2 வாரங்களாகச் சபாவில் உள்ள 5 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கையில் கடத்தல் பொருள்களை விற்கும் கும்பலைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து RM35.28 மில்லியன் மதிப்புள்ள கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது,
எல்லை பாதுகாப்புக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புப் படையான PGA பிரிவினர் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்தியதாக அப்பிரிவின் சபா மாநில இயக்குநர் Datuk Abdul Rani Alias தெரிவித்தார். சட்டவிரோதமாக மணல் சுரங்கம், கனிமவளச் சுரங்கம், சிகரெட் கடத்தல், அனுமதியற்ற முறையில் வெளிநாடுகளுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளுதல் என பல்வேறு சட்டவிரோதக் குற்றங்களுக்காக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Datuk Abdul Rani Alias தெரிவித்தார்.
PGA Sabah merampas barangan bernilai RM35.28 juta dan menahan 27 individu dalam operasi selama 10 hari di lima daerah. Serbuan melibatkan aktiviti haram seperti penyeludupan rokok, perlombongan pasir tanpa lesen, pemprosesan timah haram, dan perdagangan tanpa permit.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *