100 ஆண்டுகள் பழமையானக் கோயிலில் தமிழில் நன்னீராட்டுப் பெருவிழா!
.jpg)
- Thina S
- 21 Feb, 2025
பிப்ரவரி 21,
பெத்தாலிங் ஜெயாவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் மார்ச் 2 ஆம் நாள் தொடங்கி நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலானக் கோயிலில் தமிழில் நன்னீராட்டு விழா நடைபெறுவதாகவும் 500 பேர் அமரக் கூடிய அளவில் மண்டபமும் கொண்டிருப்பதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
18,280 திருமுறைகள்
ஓதப்பட்டு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறுவதாகவும் இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவைத்
திருக்கயிலாய மரபு மெய்கண்டார் சன்னிதானத்தின் திருப்பேரூர் ஆதீனம் சீர்வளர்சீர் சாந்தலிங்க
மருதாசல் அடிகளார் தலைமையில் நடைபெறவிருக்கிறது. இந்த ஆலயம் லோட் 619, ஜாலான் பெ.ஜே.எஸ். 1/85 பெட்டாலிங் ஜெயா செலாத்தான், ஜாலான் கிளாங் லாமா, பெட்டாலிங் டின், தாமான் சிறி செந்தோசா, பெட்டாலிங் உத்தாமாவில்
அமைந்துள்ளது.
100 ஆண்டுகள் பழமையான ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தொடக்கத்தில் சுங்கைவே பகுதியில் அங்குள்ள ஈயலம்ப தொழிலாளர்களால் நிறுவப்பட்டதாகவு. அதன் பின் கோயிலின் மேம்பாட்டுக்கானப் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பக்தர்கள் அனைவரும் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் திருகுட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *