RM300,000 திருட்டு வழக்கில் 2 காவல் அதிகாரிகளுக்கு எதிராக 21 சாட்சியங்கள்!

- Sangeetha K Loganathan
- 04 Mar, 2025
மார்ச் 4,
காவல் அதிகாரிகள் இருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மேற்கொள்பட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் சம்மந்தப்பட்ட 2 காவல் அதிகாரிகளுக்கு எதிராக 21 சாட்சியங்கள் திரட்டப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd. Isa தெரிவித்தார்.
44 வயது INSPECTOR 34 வயது KOPERAL பதவிகளில் உள்ள இருவரும் அரசு அதிகாரிகள் என்பதால் Bukit Aman ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார். கடந்த பிப்ரவரி 23 முதல் சம்மந்தப்பட்ட 2 காவல் அதிகாரிகளும் Dang Wangi காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அவர்கள் மீதான நடவடிக்கையைப் புக்கிட் அமான் எடுக்கும் வரையில் அவர்கள் இருவரும் Dang Wangi காவல் நிலையத்தில் இருப்பார்கள் என்றும் கோலாலம்பூர் காவல் துறை தலைவர் Datuk Rusdi Mohd. Isa தெரிவித்தார்.
Dua pegawai polis yang merupakan inspektor berusia 44 tahun dan koperal berusia 34 tahun disiasat atas kes kecurian RM300,000. Sebanyak 21 keterangan saksi telah dikumpulkan. Mereka kini ditempatkan di Ibu Pejabat Polis Dang Wangi sementara tindakan disiplin diambil oleh Bukit Aman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *