தலைநகரில் 7 வணிகக் கடைகளை மூடிய DBKL!

- Sangeetha K Loganathan
- 24 Feb, 2025
பிப்ரவரி 24,
சட்டவிரோதமாக இயங்கி வந்த 7 வணிகக் கடைகளை மூடியதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. தலைநகரின் செப்பூத்தேவில் நடத்தப்பட்ட சோதனையில் சம்மந்தபட்ட வணிகக் கடைகள் முறையான விற்பனை உரிமம் இல்லாமல் நடத்தப்படுவது கண்டறியப்பட்டதும் வணிகக் கடையில் இருந்த பொருள்களைப் பறிமுதல் செய்ததாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
தலைநகரில் சிறு வணிகர்களுக்கான உரிமங்களை விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இலகுவாக்கப்பட்டிருந்தும் இதுமாதிரியான வணிகக் கடைகள் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகவும் சம்மந்தப்பட்ட வணிகக் கடைகளை அப்புறப்படுத்தும்படி முன்னமே வலியுறுத்திய நிலையில் வலியுறுத்தலை மீறியதற்காக வணிகக் கடையிலிருந்த விற்பனை பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
Dewan Bandaraya Kuala Lumpur (DBKL) telah menutup tujuh premis perniagaan yang beroperasi secara haram di sekitar Chow Kit. Pemeriksaan mendapati kedai-kedai ini beroperasi tanpa lesen yang sah dan pihak berkuasa telah merampas barangan jualan. DBKL menegaskan bahawa proses permohonan lesen perniagaan telah dipermudahkan namun ada peniaga yang masih ingkar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *