வெளிநாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை மூடிய DBKL! 35 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 02 Mar, 2025
மார்ச் 2,
தலைநகரில் வெளிநாட்டினர்களின் ஆக்கிரமிப்பில் செயல்பட்டு வந்த 6 வணிகக் கடைகளைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நிரந்தரமாக மூடியதுடன் 35 வெளிநாட்டினர்களையும் தேசிய குடிநுழைவுத் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 34 இந்தோனேசியர்களும் 1 மியான்மார் நாட்டினர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 19 ஆண்கள் 15 பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது 12 வெளிநாட்டு வர்த்தகர்களையும் விசாரணைக்காகத் தடுத்து வைத்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட வர்த்தகர்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக 35 வெளிநாட்டினர்களும் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. முறையான ஆவணங்கள் இல்லாமல் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வணிகக் கடைகளை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள 35 வெளிநாட்டினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DBKL menutup enam premis perniagaan yang dikendalikan warga asing di Kuala Lumpur dan menahan 35 individu termasuk 34 warga Indonesia dan seorang dari Myanmar. Mereka didakwa menjalankan perniagaan secara haram dengan dokumen palsu dan kini dalam siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
canada pharmaceuticals
Do you mind if I quote a couple of your articles as long as I provide credit and sources back to your website? My blog site is in the exact same area of interest as yours and my visitors would truly benefit from some of the information you provide here. Please let me know if this alright with you. Regards!