வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட 200 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 27 Feb, 2025
பிப்ரவரி 27,
நேற்றிரவு கிளாந்தானில் உள்ள Tumpat சாலையில் 200 கிலோ போதைப்பொருளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சந்தேகத்திற்குரிய வாகனம் Chabang Empat சாலையில் சுற்றி வருவதைக் கண்டது சம்மந்தப்பட்ட வாகனத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டும் வாகனம் நிறுத்தாமல் தொடர்ந்து சென்ற நிலையில் வாகனத்தின் சக்கரத்தைச் சுட்டதாகவும் வாகனத்திலிருந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடியதாகவும் Kelantan மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
வாகனத்திலிருந்து 200 கிலோ syabu வகை போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதன் மதிப்பு RM6.4 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வாகனத்திலிருந்து தப்பி ஓடிய நபர் 39 வயதான Mohd Faisal Mohd Hanaffi என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் Kelantan மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
Polis merampas 200kg dadah jenis syabu bernilai RM6.4 juta di Tumpat, Kelantan. Suspek melarikan diri selepas polis menembak tayar kenderaan mereka. Salah seorang suspek Mohd Faisal Mohd Hanaffi, 39 tahun telah dikenal pasti dan sedang diburu pihak berkuasa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *