பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்! இளம் பெண் பலி!

- Sangeetha K Loganathan
- 28 Feb, 2025
பிப்ரவரி 28,
கோத்தா திங்கி சாலையில் மாலை 6.50 மணிக்கு ஏற்பட்ட சாலை விபத்தில் 19 வயது இளம் பெண் உயிரிழந்ததாகக் கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman தெரிவித்தார். 19 வயது இளம் பெண் ஓட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்தது சாலையின் தடுப்புச் சுவரை மீறி 7 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்து ஏற்பட்ட இடத்திலேயே 19 வயது இளம்பெண் உயிரிழந்த நிலையில் அவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோத்தா திங்கி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைக்காகச் சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும் கோத்தா திங்கி மாவட்டக் காவல் ஆணையர் Yusof Othman கேட்டுக்கொண்டார்.
Seorang remaja perempuan berusia 19 tahun maut selepas kereta dipandunya terbabas dan jatuh ke dalam gaung sedalam tujuh meter di Jalan Lok Heng-Mawai, Kota Tinggi. Mangsa mengalami kecederaan parah di kepala dan disahkan meninggal di tempat kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *