ஸ்ரீ அண்டாலாஸ் இடைநிலைப் பள்ளியின் மாணவர் விவகாரங்கள் இணை பாடத்திட்ட பாராட்டு விழா!

- Muthu Kumar
- 21 Feb, 2025
ஸ்ரீ அண்டாலாஸ் இடைநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் விவகாரங்கள் மற்றும் இணை பாடத்திட்ட பாராட்டு விழா வெகு விமரிசையாக நாளை நடைபெற உள்ளது.
தேதி: சனிக்கிழமை, 22 பிப்ரவரி 2025 நேரம்: காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இடம்: டத்தாரான் கெமிலாங் விழாவினை நாடறிந்த நன்கொடையாளரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ். பா. தியாகராஜன் அவர்கள் தொடங்கி வைப்பார்கள்.
மாணவர்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் இந்த விழாவில், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஸ்ரீ அண்டாலாஸ் இடைநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஹாஜி மஸ்னாவி பின் மிஸ்ரோ கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *