RM2.9 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news

மார்ச் 2,

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்ட கடத்தல் சிகரெட்டுகளைச் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கிளாந்தான் மாநிலச் சுங்கத்துறை இயக்குநர் Wan Jamal Abdul Salam தெரிவித்தார். நேற்று இரவு 11.30 மணியளவில் கோத்தாபாருவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடத்தல் சிகரெட்டுகளைக் கொண்டுள்ள 320 பெட்டிகள் பறிமுதல் செய்ததாகவும் அதன் மதிப்பு RM2.9 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் Wan Jamal Abdul Salam தெரிவித்தார்.

மலேசியாவில் சிகெரட்டுகளுக்குத் தனிக்கை ஆணையம் விதித்துள்ள நிக்கோத்தின் அளவுகளை மீறி சிகரெட்டுகள் தயாரிக்கப்பட்டதால் முறையான அனுமதியைப் பெறாமல் 30,000 க்கும் மேற்பெட்ட சிகரெட்டுகள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Jabatan Kastam Kelantan merampas 320 kotak rokok seludup bernilai RM2.9 juta dalam serbuan di Kota Bharu. Rokok tersebut diimport secara haram tanpa kelulusan kerana melebihi had nikotin yang ditetapkan di Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *