பள்ளிகளில் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள்! – கல்வி அமைச்சர்!
.jpeg)
- Sangeetha K Loganathan
- 28 Feb, 2025
பிப்ரவரி 28,
பள்ளிகளில் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்து 2027 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார். புதிய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் கலாச்சாரம், சமூகம், கலை, பாரம்பரியம், விளையாட்டுகள் பலதரப்பட்ட சமூகங்களின் வரலாற்றை நிலைநிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக Fadhlina Sidek தெரிவித்தார்.
மாணவர்களிடையே பிற சமூகத்தின் வரலாறுகள் தொடர்பான அறிவை விதைப்பதன் மூலம் சிறுவயதிலேயே வேற்றுமை உணர்வுகளிலிருந்து விடுப்படவும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கான வழியைப் புதிய வரலாற்றுப் பாடத்திட்டம் கொண்டுள்ளதாக Fadhlina Sidek வலியுறுத்தினார். சபா சரவாக் வாழ் மக்களின் வாழ்வியல் வரலாறுகளை நாம் அறியவும் புதிய வரலாற்றுக் கல்வித் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என Fadhlina Sidek நம்பிக்கை அளித்தார்.
Kurikulum baharu Sejarah dijangka digunakan pada 2027 dengan penekanan kepada keseimbangan kandungan, termasuk aspek budaya, sosial, seni, dan sukan. Ia juga memperluas skop sejarah dunia serta menonjolkan sejarah Sabah dan Sarawak bagi memperkukuh perpaduan nasional.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *