சொத்து விவரங்களை அறிவித்தார் இஸ்மாயில் சப்ரி!

- Muthu Kumar
- 04 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 4-
முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) தமது சொத்து விவரங்களை அறிவித்துள்ளார். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை நடைபெற்றுவரும் வேளையில் அவர் இந்த விவரங்களை அறிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பிரதமர் பதவியை வகித்து வந்தவரான இஸ்மாயில், தம்முடைய பதவிக் காலத்தில் ஊக்குவிப்பு மற்றும் விளம்பர நோக்கங்களுக்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டார் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தார் என்பதை மையமாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று வெளியிட்ட அறிக்கையொன்றில் எம்ஏசிசி குறிப்பிட்டது.
2009ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டம் 360ஆவது பிரிவின்கீழ் தம்முடைய சொத்து விவரங்களை அறிவிக்கும்படி கடந்தாண்டு டிசம்பர் 11ஆம் தேதி இஸ்மாயிலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று சொத்து விவரப் பட்டியலை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தார் என்று அந்த அறிக்கை கூறியது.
வாக்குமூலம் அளிப்பதற்காக எம்ஏசிசி தலைமையகத்திற்கு வரும்படி பிப்ரவரி 19ஆம் தேதியன்று அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது என்றும் அது கூறியது.
Bekas Perdana Menteri, Ismail Sabri Yaakob, telah mengisytiharkan asetnya kepada SPRM ketika disiasat berkaitan rasuah dan pengubahan wang haram. SPRM menyiasat perbelanjaan dan peruntukan semasa jawatannya (2021-2022). Beliau mematuhi arahan mengisytiharkan aset pada 10 Februari dan dipanggil memberi keterangan pada 19 Februari.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *