நந்தகுமார் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் உண்டு! – MACC விளக்கம்!

top-news

மார்ச் 2,


வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தொடர்பான முகவரிடமிருந்து RM20,000 ரொக்கமாகப் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் நந்தகுமாருக்கு எதிராகப் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். நந்தகுமார் இதற்கு முன்னதாக எழுதிய செய்திகளில் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீது புகார்களை அடுக்கடுக்காக வைத்ததால் அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிப்பதில் எந்தவொரு பயனும் இல்லை என்றும், லஞ்சம் பெற்றதற்காக ஒரு நபரைக் கைது செய்துள்ளோம் அவ்வளவு தான் என்றும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை மலேசியாவுக்குக் கொண்டு வரும் ஒரு நிறுவனத்திற்கு எதிராகச் செய்திகள் வெளியிடாமல் இருக்க நிறுவனத்திடமிருந்து RM20,000 ரொக்கமாகப் பெற்றதற்காக நந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கும் அவர் எழுதிய முன்னாள் கட்டுரைகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki விளக்கமளித்தார். லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் தனிநபர்களைக் குறிவைத்து பிடிக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை, மாறாக லஞ்சம் ஊழல் பெறும் நபர்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கண்காணிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை என லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.

SPRM menegaskan tidak berat sebelah dalam melaksanakan siasatan rasuah termasuk terhadap wartawan. Ketua Pesuruhjaya SPRM Tan Sri Azam Baki, menjelaskan penahanan wartawan dibuat berdasarkan bukti kukuh melibatkan suapan RM20,000 bagi menurunkan artikel tentang sindiket pekerja asing.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *