மலேசியாவுக்குள் நுழைந்த 68 வெளிநாட்டினர்கள் KLIA விமான நிலையத்தில் கைது!

- Sangeetha K Loganathan
- 20 Feb, 2025
பிப்ரவரி 20,
போலி ஆவணங்களுடன் மலேசியாவுக்குள் நுழைய முயன்ற 68 வெளிநாட்டினர்களைக் குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. KLIA விமான நிலையத்தில் கடந்த ஜனவரி முதல் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு விமானம் மூலம் வரும் 2,654 வெளிநாட்டினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 900 க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைவது கண்டறிப்பட்ட நிலையில் அவர்களில் 68 பேரை ஆதாரத்துடன் கைது செய்துள்ளதாக குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் அதிமானோர் Pakistan, Bangladesh, India ஆகிய நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வேலை செய்வதற்காகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் வரும் நிலையில் முறையான விசா அனுமதியின்றி சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை மலேசியாவிற்கு அழைத்து வரும் ஏஜென்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebanyak 68 warga asing ditahan di KLIA kerana cuba memasuki Malaysia dengan dokumen palsu atau menggunakan visa pelancong secara tidak sah. Tangkapan dibuat selepas pemeriksaan imigresen sejak Januari mendapati lebih 900 individu cuba memasuki negara tanpa visa kerja yang sah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *