ஆற்றில் தவறி விழுந்த ஆடவர்! 2 நாள்கள் தேடலுக்குப் பின் சடலமாக மீட்பு!

top-news

ஏப்ரல் 29,

கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மீன்பிடிப்பதற்காக வலையுடன் சென்ற 39 வயது ஆடவர் காணாமல் போனதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையுடன் மீட்புப் படையினரும் பொதுமக்களும் தேடி வந்த நிலையில் இன்று காலை 9.50 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டதாக Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். உயிரிழந்தவர் 39 வயது Mohd Saufi Rosni எனும் தபால்காரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக Roslan Mohd Talib தெரிவித்தார்.

தங்காக்கில் உள்ள Sungai Sawah Ring ஆற்றில் அதிகாலை மீன் பிடிக்கும் பழக்கம் கொண்ட அவர் அதிகாலை மீன் வலையுடன் வீட்டை வெளியேறியதாகவும் காலை வீடு திரும்பாததால் குடும்பத்தினரால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார். நேற்று காலை அவரின் மீன் வலைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 800 மீட்டர் தொலைவிலிருந்து இன்று காலை 9.50 மணிக்கு அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக Tangkak, மாவட்டக் காவல் ஆணையர் Roslan Mohd Talib தெரிவித்தார்.

Seorang posmen yang dilaporkan hilang selepas keluar memasang tajur ditemui lemas di Sungai Sawah Ring, Tangkak. Mayat Mohd Saufi Rosni ditemukan rakannya, dipercayai terjatuh dari bot ketika memancing. Kes diklasifikasikan sebagai mati mengejut

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *