உணவைத் திருடியதாகக்கூறி நாய்க் குட்டி அடித்துக் கொலை

- Muthu Kumar
- 01 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 1 -
தமது வீட்டிலிருந்த உணவைத் திருடியதாகக் கூறி, சிலாங்கூரின் ரவாங்கில் ஆடவன் ஒருவன் நாய்க் குட்டி ஒன்றை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில் ஒரு புகார் பெறப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் நசிர், விலங்கு நலச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.“விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறிய நோர், இதன் தொடர்பில் போலீசார் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என்றார்.
சமூக வலைத் தளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் அச்சம்பவம் தொடர்பிலான ஒரு போலீசார் விசாரணை காணொளியில், உயிரற்று தரையில் கிடக்கும் நாய்க் குட்டியை ஆடவன் ஒருவன் எட்டி உதைப்பதைக் கண்டித்து ஒரு பெண் கேள்வி கேட்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.
Polis sedang menyiasat kes seorang lelaki di Rawang yang didakwa membunuh anak anjing kerana mencuri makanan. Ketua Polis Daerah Gombak mengesahkan siasatan dibuat di bawah Akta Kebajikan Haiwan susulan aduan dan video kejadian tular di media sosial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *