ROS எதிராக உரிமை கட்சி நீதிமன்றத்தில் வழக்கு!

- Sangeetha K Loganathan
- 27 Feb, 2025
உரிமை கட்சியை அங்கீகரிக்காமல் தேசிய அமைப்புகளின் பதிவு இலாகா ROS தடை விதித்திருப்பதை எதிர்த்து உரிமை கட்சியினர் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமசாமி இன்று தெரிவித்தார். முன்னதாக உள்துறை அமைச்சின் ROS உரிமை கட்சியின் விண்ணப்பத்தை நிராகரித்த நிலையில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உரிமைக் கட்சியின் தற்காலிகத் தலைமை குழுவிற்கு அங்கீகரிப்பதாகவும் தேசிய அமைப்புகளின் பதிவு இலாகா ROS-க்கு எதிரான வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
தேசிய அமைப்புகளின் பதிவு இலாகா ROS க்கு எதிரான உரிமை கட்சியின் வழக்கிற்கான நீதிமன்ற விசாரணையை உயர்நீதிமன்றம் விரைவில் தொடங்கவிருப்பதாகவும் முதல் விசாரணைக்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும் என உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமசாமி இன்று தெரிவித்தார். உரிமை கட்சிக்காக Siva Murugan, Shamsher Singh Thind, Gunamalar ஆகிய வழக்கறிஞர்கள் நீதிமன்ற வழக்குகளுக்கான வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமசாமி இன்று தெரிவித்தார்.
Parti Urimai memfailkan saman di Mahkamah Tinggi Kuala Lumpur terhadap Jabatan Pendaftaran Pertubuhan Malaysia (ROS) kerana menolak permohonan pendaftaran mereka. Mahkamah mengarahkan ROS untuk mempertimbangkan semula dan perbicaraan kes akan diumumkan kelak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *