பிஎல்கேஎன் 3.0 பயிற்சியாளர்களின் சிறந்த அடைவுநிலை; அரசாங்கத்திற்கு ஊக்குவிப்பு!

- Muthu Kumar
- 23 Feb, 2025
கோலாலம்பூர், பிப். 23-
தேசிய சேவை பயிற்சித் திட்டம், பிஎல்கேஎன் 3.0 பயிற்சியாளர்களின் முதல் குழு சிறந்த அடைவுநிலையைப் பதிவு செய்திருப்பது, சம்பந்தப்பட்ட திட்டத்தை வலுப்படுத்தி அடுத்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ள அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஊக்குவிப்பாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு பயிற்சியாளரும் அத்திட்டத்தின் மீது கொண்டிருக்கும் உயர் நம்பிக்கையும் அது இளம் தலைவர்களை உருவாக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப சரியான தடத்தில் இருப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதும் கண்டறியப்பட்டதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் தெரிவித்தார்.
"எனவே, இது ஒரு நல்ல கலவையாகும். அவர்கள் முழு போட்டியாற்றலுடன் வாழ்கின்றனர். நான் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்தது போல நாங்கள் திட்டமிட்டபடி நடப்பதை முதல் குழுவினர் நிரூபித்துள்ளனர். அதற்காக, நான் உதவ ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்றார் அவர்.
நேற்று, கோலாலம்பூரில், பிஎல்கேஎன் 3.0 பயிற்சியாளர்களைச் சந்தித்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் டான்ஸ்ரீ ஜொஹாரி அவ்வாறு குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில், பாதுகாப்பிற்கான சிறப்பு தேர்வுக்குழுவின் வழி தங்கள் தரப்பு சம்பந்தப்பட்ட திட்டத்தை கண்காணிக்கவிருப்பதாகக் கூறிய ஜொஹாரி, வருங்காலத்தில் எல்பிகேஎன்-ஐ தொடர தமது ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *