போர்ட்டிக்சன் படகுத்துறையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் மரணம்!

top-news
FREE WEBSITE AD

போர்ட் டிக்சன், மார்ச் 3: நேற்று போர்ட்டிக்சன் கம்போங் கெலாம் மீனவர் படகுத்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் விழுந்ததாக நம்பப்படும் 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறந்தான்.

சிறுவனின் உடல் இன்று அதிகாலை 12.28 மணிக்கு, அவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 50 மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக போர்ட் டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய தலைவர் முகமட் கமால் முகமட் திமார் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.  மேலும் அவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது, என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 இரவு 7.28 மணிக்கு தனது குழுவிற்கு அவசர அழைப்பு வந்ததாகவும், போர்ட் டிக்சன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் கமால் கூறினார்.

கடற்கரையை கண்காணித்த தெலுக் கெமாங் நீர் மீட்புக் குழுவின் (PPDA) உதவியுடன் இரண்டு மூத்த அதிகாரிகள் உட்பட 23 பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

லுகுட்டில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த ஐந்தாம் படிவம் படிக்கும் மாணவரான பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிக்க, பிபிடிஏ உறுப்பினர்கள் கரையிலிருந்து 50 மீ சுற்றளவில் தேடினர் என்று அவர் கூறினார்.

Seorang remaja lelaki berusia 17 tahun lemas selepas terjatuh ke dalam laut ketika memancing di Kampung Kelam, Port Dickson. Mayatnya ditemui 50 meter dari lokasi kejadian. Pasukan penyelamat dengan 23 anggota melaksanakan operasi mencari dan menyelamat sebelum mayat diserahkan kepada pihak polis.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *