நான் ஊழல்வாதியா? ஆதாரம் இருக்கா? - Zahid Hamidi கேள்வி!

- Sangeetha K Loganathan
- 24 Jun, 2025
ஜூன் 24,
தன் மீதான ஊழல் வழக்குகளில் எந்தவோர் ஆதாரமும் இல்லை என நீதிமன்ற விசாரணையில் நான் நிரூபித்துள்ளேன் என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi இன்று குறிப்பிட்டார். சபா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கனிமவள ஊழல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என நானோ நீங்களோ பொத்தாம் பொதுவாகக் கருத்துகளைத் தெரிவிப்பதில் எந்தவொரு பயனுமில்லை என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார்.
அவர்கள் எந்தவோர் ஊழலிலும் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் சாட்சியங்களுடன் நிரூபிக்க வேண்டும். அப்படியான சாட்சிகள் இருந்தால் ஊழல் செய்தவர்கள் நிச்சயம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அரசியல் காரணங்களுக்காக எந்தவோர் ஊழல்வாதியும் தப்பிக்க கூடாது என்றும் என் மீதான ஊழல் வழக்கில் முறையான ஆதாரங்கள் இல்லை. என்னை உட்பட யார் மீது எந்தவோர் ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டாலும் ஆதாரத்துடன் வழக்கு தொடுக்க வேண்டும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi நினைவூட்டினார்.
Zahid Hamidi menegaskan beliau telah membuktikan di mahkamah tiada bukti terhadap dakwaan rasuah ke atasnya. Beliau turut menyatakan bahawa hanya mahkamah yang layak menentukan bersalah atau tidak bukan pandangan umum atau politik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *