1000 கிலோ அரிசி மூட்டையை கடத்திய ஆடவர் கைது!

top-news

மே 2,

வெளிநாட்டிலிருந்து முறையானச் சோதனைகள் செய்யாமல் மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக அரிசி மூட்டைகளைக் கடத்திய ஆடவரை எல்லை பாதுகாப்புச் சிறப்புப் படையினர் கைது செய்தனர். நேற்று காலை சந்தேகத்திற்குரிய வாகனத்தை Tumpat சாலையில் சோதனையிட்டதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 1000 கிலோ பச்சை அரிசி மூட்டைகளும் 216 கிலோ PULUT வகை அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்மந்தப்பட்ட வாகனமோட்டி தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதப் பாதைகளைப் பயன்படுத்தி அரிசி மூட்டைகளைக் கடத்தியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்து. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளின் மதிப்பு RM 6,800 என கணக்கிடப்பட்டுள்ளது. 34 வயது வாகனமோட்டியைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PGA Briged Tenggara menggagalkan penyeludupan 1,216 kg beras di Kg Jubakar Simpangan, Tumpat dalam Op Taring Wawasan. Seorang lelaki ditahan dan beras disyaki dari Thailand dirampas. Nilai rampasan dianggarkan RM6,800.00.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *