DAP-க்கு தலைவணங்குகிறோமா? – ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், மே 11: மத மற்றும் இன உணர்வுகளை தீவிரமாகப் பரப்பும் நபர்கள் அரசியல் நயவஞ்சகர்கள் என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிட குற்றம் சாட்டினார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற அம்னோவின் 79வது ஆண்டு விழாவில் பேசிய ஜாஹித் இதனைத் தெரிவித்தார்.

டிஏபிக்கு அம்னோ தலைவணங்குவதாகக் கூறுகிறார்கள். ஆனால்,  பல ஆண்டு காலமாக பக்காத்தான் ராக்யாட் மற்றும் பாரிசான் ஆல்டர்நேட்டிஃப் கட்சியுடன் அபப்டிச் சொல்பவர்கள்தான் கூட்டணி வைத்திருந்ததாக ஜாஹிட் கூறினார்.

 2018 பொதுத் தேர்தலில் அம்னோவை வீழ்த்துவதற்காக அவர்கள் டிஏபியுடன் அரசாங்கத்தை அமைத்தனர். மேலும் பிகேஆர் லோகோவைப் பயன்படுத்தி தங்கள் சொந்தக் கொள்கைகளுக்கு எதிராகச் சென்றனர் என்று ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.

டிஏபி அலுவலகத்தின் முன் பிரார்த்தனை செய்ய அம்னோ ஒருபோதும் தனது உறுப்பினர்களை அனுமதிக்கவில்லை என்று ஜாஹிட் கூறினார்.

இன்று அவர்கள் அரசியல் பாசாங்குத்தனம் காட்டுகிறார்கள் என்று பாஸ் மற்றும் பெரிகாத்தான் நேஷனலை ஜாஹிட் வெளிப்படையாகத் சாடினார்.

கட்சி உறுப்பினர்கள் இதுபோன்ற தந்திரங்களுக்கு பலியாக வேண்டாம் என்று ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

மேலும் அம்னோவில் உள்ள அனைத்து முக்கிய முடிவுகளும் கூட்டாக விவாதங்கள் மூலம் எடுக்கப்படுகின்றன என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அவை கூட்டு ஆலோசனை மற்றும் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் தலைமைத்துவ உணர்விலிருந்து வருகின்றன. உங்கள் நம்பிக்கை எங்களுக்கு இருக்கும் வரை எங்கள் போராட்டத்தின் கண்ணியத்தை நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம்  என்று அவர் கூறினார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கொடியின் கீழ் டிஏபி உட்பட பிற கட்சிகளுடன் அம்னோவின் ஒத்துழைப்பு தேசத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் கூறினார்.

இது அரசியல் நிலைத்தன்மைக்காக எல்லை தாண்டிய ஒத்துழைப்பு என்று அவர் வர்ணித்தார்!


Ahmad Zahid Hamidi menyelar pihak yang menyebar sentimen perkauman dan agama sebagai bermotif politik. Dalam ucapan ulang tahun ke-79 UMNO, beliau menegaskan kerjasama dengan DAP adalah demi kestabilan negara, bukan tunduk, dan menyeru ahli UMNO agar tidak terpedaya dengan muslihat politik lawan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *