தாய் - எதிர்கால சந்ததியை வடிவமைக்கும் முதுகெலும்பு! - அன்வார் அன்னையர் தின வாழ்த்து

- Shan Siva
- 11 May, 2025
கோலாலம்பூர், மே 11: கண்ணியமான மற்றும் இரக்கமுள்ள எதிர்கால தலைமுறையை
வடிவமைப்பதில் தாய்மார்கள் தூணாக விளங்குகிறார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் தமது அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஒரு தாய்
குடும்பத்தின் 'ராணி' மட்டுமல்ல, நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள, மற்றும் இரக்கம்,
அர்ப்பணிப்பு மற்றும் அன்புடன் வழிநடத்தத்
தயாராக இருக்கும் எதிர்கால சந்ததியினரை வடிவமைப்பதிலும் வளர்ப்பதிலும்
முதுகெலும்பாக இருக்கிறார் என்று அவர் கூறினார்.
சமூகத்தின் அடித்தளமாக
இருக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என்று
அன்வர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில் அன்வர் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அவரது மறைந்த தாயார் சே யான் ஹமீத் ஹுசைன் மற்றும் அவரது மகள்களுடன் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது!
Perdana Menteri Anwar Ibrahim menyatakan bahawa ibu ialah tunjang membentuk generasi masa depan yang berakhlak dan penyayang. Dalam ucapan Hari Ibu, beliau menyifatkan ibu sebagai ‘ratu keluarga’ dan tulang belakang masyarakat, serta mengucapkan penghargaan kepada semua ibu atas pengorbanan mereka.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *