ராகுவால் உச்சமடையப் போகும் 5 ராசிகள்!

- Muthu Kumar
- 06 May, 2025
வேத ஜோதிடத்தில் சனிக்கு அடுத்தபடியாக மிக மெதுவாக நகரும் கிரகம் ராகு ஆகும். இந்த ராகுவிற்கு சொந்தமான ராசி என்று எதுவும் கிடையாது.
ராகு 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு, சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்ல உள்ளார்.
கும்ப ராசியில் ராகு நுழைவதால் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டத்தைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேஷம்
இந்த மாதம் நடைபெறும் ராகு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். வருமானத்தில் வளர்ச்சி உண்டாகும். நண்பர்கள், உறவுகள் வலுவாகும். உங்கள் வேலை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
கும்ப ராசியில் ராகு சஞ்சரிப்பது மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஏனெனில் இந்த பெயர்ச்சி உங்கள் லாப ஸ்தானத்தில் நிகழ்கிறது. இந்த காலகட்டத்தில், தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறலாம். அரசியல் மற்றும் ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் அதிகப் பயன்களைப் பெறுவார்கள். நிதி அடிப்படையில் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த பெயர்ச்சி காதல் மற்றும் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். துலாம் ராசிக்காரர்களின் ஐந்தாம் வீட்டில் நடக்கும் இந்த பெயர்ச்சியால் கல்வி, காதல், உறவுகள், குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கலை, சினிமா, எழுத்து, ஊடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் அலுவலகத்தில் புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள். இது தவிர, முதலீடு தொடர்பான எந்த முக்கிய முடிவையும் நீங்கள் எடுக்கலாம். இது எதிர்காலத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு பயனளிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதி விஷயத்தில் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. உங்கள் வீட்டில் ராகு பெயர்ச்சி ஒரு புதிய வருமான ஆதாரத்தை உருவாக்குகிறது. வியாபாரிகளுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான அறிகுறிகளும் உள்ளன. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும். இந்த காலகட்டத்தில் சில பெரிய நிதி முடிவுகள் எடுக்கப்படலாம்.
மீனம்
இந்த ராகு பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அரசியல், ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். நிதி அடிப்படையில், இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து பலன்களைப் பெறலாம். புதிய வாய்ப்புகளை தேடிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு பெரும் செல்வாக்கு இருக்கும். இருப்பினும் ராகுவின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். எனவே எந்தவொரு முக்கிய முடிவையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு
நம் சிந்தனைப் பூங்காவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று கூறமுடியாது. அவற்றைத் தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *