அரசு நிலங்களை ஆக்கிரமித்த 80 பேர் கைது!

- Sangeetha K Loganathan
- 02 May, 2025
மே 2,
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தற்போது வரையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளையும் அரசு நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்ததாக மொத்தம் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். இதுவரை 59 விசாறனை ஆவணங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பகாங் மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார்.
இதுவரையில் பல்வேறு வகையிலான 105 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் 622 இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். அரசு நிலங்களையும் தனியார் நிலங்களையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் காவல்துறையினர் தொடர்ந்து இது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Pihak polis Pahang menahan 80 individu kerana menceroboh tanah kerajaan dan hutan simpan sejak Ogos lalu. Sebanyak 105 kenderaan dan 622 mesin turut dirampas. Polis memberi amaran supaya tidak menceroboh tanah milik kerajaan dan persendirian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *