RON 97 & டீசல் 7 காசுகள் உயர்கிறது!

- Shan Siva
- 18 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 18: தீபகற்ப மலேசியாவில் RON 97 மற்றும் டீசலின் விலை வரும் வாரத்தில் லிட்டருக்கு 7 காசுகள் அதிகரிக்கும்
என்று நிதி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
RON97 விலை நாடு
முழுவதும் லிட்டருக்கு 3 வெள்ளி 7 காசிலிருந்து, 3 வெள்ளி 14 காசுகளாக உயரும் என்றும், டீசல் விலை லிட்டருக்கு 2 வெள்ளி 74 காசிலிருந்து 2 வெள்ளி 81 காசுகளாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுகள் மானிய
விலையில் சில்லறை விற்பனை செய்யப்படும்.
இந்த விலைகள் ஜூன் 25 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
RON97 dan diesel naik 7 sen seliter mulai minggu ini, menurut Kementerian Kewangan. RON97 kini RM3.14, diesel RM2.81. Di Sabah, Sarawak dan Labuan, diesel dijual pada harga subsidi RM2.15 seliter hingga 25 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *