ஹாடி பதவி விலக வேண்டியதில்லை- டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம்!

- Muthu Kumar
- 23 Jun, 2025
பாரிட், ஜூன் 23-
டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியில் நீடித்து வரவேண்டும் என்று பாஸ் விரும்புகிறது. ஹாடியின் அனுபவ அறிவும் ஆலோசனைகளும் தலைமைத்துவப் பண்புகளும் கட்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் வலியுறுத்தினார்.
ஹாடியின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டும் கட்சிக்கு உத்வேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அவர் ஒதுங்கிக் கொள்ளவேண்டுமென்று சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது குறித்து நேற்று கருத்துரைத்த துவான் இப்ராஹிம், கட்சி தற்போது வலுவுடன் இருந்து வரும் நிலையில், கட்சி ஆலோசகர் போன்ற வேறு பொறுப்புகளை ஏற்பதற்கோ தலைவர் பதவியைத் துறப்பதற்கோ அவருக்கு அவசியம் ஏற்படவில்லை என்றார்.
ஹாடிக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏதும் இல்லை. அண்மையில்தான் ஐஜேஎன் மருத்துவ மையத்தில் அவர் சிகிச்சை பெற்றார்.அவரின் உடல்நிலை இப்போது நன்றாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அவர் திரும்புவார் என்றார் துவான் இப்ராஹிம்.
ஹாடி தலைமையில் பாஸ் கட்சி அபாரமான பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் 34 நாடாளுமன்றத் தொகுதிகளையும் நான்கு மாநிலங்களையும் அது கைப்பற்றியது. இதர பல மாநிலங்களிலும் கணிசமான சட்டமன்றத் தொகுதிகளையும் அது கைப்பற்றியுள்ளது என்றார் அவர்.
PAS mahu Tan Sri Abdul Hadi Awang kekal sebagai Presiden parti kerana kepimpinannya masih diperlukan. Timbalan Presiden, Datuk Seri Tuan Ibrahim, menegaskan kesihatan Hadi stabil dan tiada keperluan beliau berundur meskipun wujud desakan daripada sesetengah pihak.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *