ரபிஸி விடுமுறையில் செல்வது ஒரு விஷயமே அல்ல - அன்வார் கருத்து!

- Muthu Kumar
- 03 May, 2025
ஜெஞ்ஜாரோம், மே 3-
விடுமுறையில் செல்ல பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி செய்துள்ள முடிவைத் தற்காத்துப் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதுவொரு விஷயமே அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சில நாட்களுக்கு மட்டுமே அவர் விடுப்பில் செல்கிறார் என்றும் அன்வார் விளக்கினார்.
யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது எனும் சட்டம் உள்ளதா? நானும் சில நாட்களுக்கு விடுமுறையில் இருக்க விரும்புகிறேன் என்று சிலாங்கூர்,ஜெஞ்ஜாரோமில் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அன்வார் கூறினார்.
"நான் இதுவரை விடுமுறை எடுத்ததில்லை. ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்குப் பிறகு ஒருவேளை சில நாட்களுக்கு விடுமுறை எடுப்பேன்” என்று கூறினார். ரபிஸி தொடர்ந்து பணிக்கு வராமல் இருப்பதற்கான காரணம் பற்றி செய்தியாளர்கள் விடாப்பிடியாக கேள்வி எழுப்பியபோது அன்வார் பதிலளித்தார்.
ரபிஸி விடுப்பில் இருப்பதை தமது பெயரை வெளியிட வேண்டாமென்று கேட்டுக் கொண்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி மலேசியாகினி பத்திரிகை நேற்றுமுன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், ரபிஸி பதவி விலகியிருப்பதாகக் கூறப்படுவதை அந்த அமைச்சர் மறுத்தார். பிகேஆர் கட்சியின் அண்மைய தொகுதித் தேர்தலில் ரபிஸிக்கு அணுக்கமான பல தலைவர்கள் தோல்வி கண்டதைத் தொடர்ந்து ரபிஸி விடுமுறையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
அக்கட்சியின் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அமாட், இளைஞர் பகுதித் தலைவர் அடாம் அட்லியும் இதர பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொகுதித் தேர்தலில் தோல்வி கண்டுள்ளனர். தொகுதித் தேர்தல்களில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகப் புகார்கள் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதனை ஆராய்வதற்கு சுயேச்சை கணக்காய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அன்வார் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காப்பதற்காக ரபிஸி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Perdana Menteri Anwar Ibrahim menjelaskan bahawa keputusan Menteri Ekonomi, Rafizi Ramli, untuk bercuti hanya sementara dan tidak menjadi isu besar. Rafizi akan kembali bekerja selepas beberapa hari, dengan perbincangan mengenai isu pilihan raya PKR yang baru-baru ini diadakan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *