ரபிஸி விடுப்பில் செல்லக் கூடாது - பெர்சத்து இளைஞர் பகுதி கோரிக்கை!

- Muthu Kumar
- 03 May, 2025
பெட்டாலிங் ஜெயா, மே 3-
அமெரிக்காவின் வரிவிதிப்பினால் வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் நிச்சயமற்ற ஒரு சூழல் நிலவிவரும் வேளையில், பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி விடுப்பில் செல்லக்கக்கூடாது என்று பெர்சத்து கட்சியின் இளைஞர் பகுதி வலியுறுத்தியுள்ளது.
பொருளாதாரம் சரிவைச் சந்திக்கும் சாத்தியம் இருப்பதால் அதனைச் சமாளிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மீட்சித் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்ய பொருளாதார அமைச்சரின் பங்களிப்பு முக்கியமாகும்.
நெருக்கடி மிக்க மாதத்தில் பொருளாதார அமைச்சர் இல்லாமல் இருப்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளைப் பாதிக்கச் செய்யும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் ஹாரிஸ் இடாஹாம் ரஷிட் சுட்டிக் காட்டினார்.
அண்மையில் நடைபெற்ற பிகேஆர் தொகுதித் தேர்தல்களில் ரஸியின் ஆதவாளர்கள் பலர் தோல்வி கண்டிருப்பதைத் தொடர்ந்து ரபிஸி விடுப்பில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரபிஸியின் விடுப்பை ரத்து செய்யும்படி பிரதமரை பெர்சத்து கேட்டுக் கொள்கிறது என்றும் ஹாரிஸ் சொன்னார்.
ரபிஸி பல நாட்களுக்கு விடுப்பில் சென்றுள்ளார் என்று புதன்கிழமையன்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார் என இணையப் பத்திரிகையொன்று குறிப்பிட்டுள்ளது.
BERSATU Youth mendesak Menteri Ekonomi Rafizi Ramli batalkan cutinya kerana ketidaktentuan ekonomi global. Kehadirannya penting dalam memastikan kestabilan ekonomi negara. Desakan timbul susulan kekalahan penyokong Rafizi dalam pemilihan PKR baru-baru ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *