மகா சிவராத்திரி மலேசிய ஆலயங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது!

- Shan Siva
- 27 Feb, 2025
சிவபெருமானை போற்றி
வணங்கும் திருநாளான மகா சிவராத்திரி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மலேசியாவில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் வெகு சிறப்பாக மகா சிவராத்திரி
கொண்டாடப்பட்டு வருகிறது..
சிவபெருமானை
போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது என்பதால், மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட
மகா சிவராத்திரியன்று விரதம் மேற்கொண்டு சிவபெருமானை பூஜிப்பது வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டு சிவாலயங்களில் ஏராளமான பக்தர்கள் இரவில் இருந்தே வருகை தந்து சிவபெருமானை தரிசனம் செய்தவண்ணம்
உள்ளனர்.
பிரதான
கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருப்பதால், சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம்
சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி சிறப்பு
பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 4 கால பூஜைகளோடு, சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து மக்களை பக்திப் பரவசத்தில்
திளைக்க வைத்துள்ளது. ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்று வருகிறது.
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள சிவன் ஆலயத்தில் இசை ஆராதனைகளோடு சிவராத்திரி
நடைபெற்றது.
கிள்ளான் புக்கிட் திங்கி ஆலயத்தில் 1008 சிவ தீபங்கள் ஒளிர ஏராளமான மக்கள் மனமுருகி
வேண்டினர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *