பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க பேசிய பாகிஸ்தான் அமைச்சர்!

- Muthu Kumar
- 09 May, 2025
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு கடந்த புதன் கிழமை அதிகாலையில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதற்கு நேற்று பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் நம் நாட்டை தாக்க முயன்றது. ஆனால் நம் நாட்டு படை வீரர்கள், வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை பாகிஸ்தானின் முயற்சியை முடக்கின. பாகிஸ்தானின் ஏவுகணை ட்ரோன், போர் விமானங்களை வானிலையே சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதையடுத்து நம் நாடு நேற்று லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி உள்பட பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக நேற்றைய தாக்குதலில் சீனாவில் இருந்து வாங்கி லாகூரில் நிறுவப்பட்டு இருந்த வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் நம் நாட்டின் ட்ரோன் மூலம் வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில் தான் முன்னாள் ராணுவ மேஜரும், எம்பியுமான தாரிக் இக்பால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கண்ணீர் மல்க பேசியுள்ளார். இந்தியாவின் தாக்குதலில் இருந்து அல்லா தான் பாகிஸ்தானை காக்க வேண்டும். நாம் பலவீனமாக இருக்கிறோம். அனைவரும் அல்லாவிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கண்ணீருடன் பேசியுள்ளார். இதுதொடர்பாக தாஹிக் இக்பால் எம்பி பேசியதாவது:
''நாம் பலவீனமாக இருக்கிறோம். இதனால் அனைத்து எம்பிக்களும் அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லாவே உங்கள் முன் மண்டியிட்டு கேட்டு கொள்கிறோம். எங்களின் நாட்டை காப்பாற்றுங்கள். இந்த நாடு உங்கள் பிரார்த்தனையால் பிறந்தது. அல்லா தான் இந்த நாட்டை நமக்கு கொடுத்தார். அவரால் மட்டுமே இந்த நாட்டை பாதுகாக்க முடியும்.
தவறு நம்முடையதாக இருக்கலாம். நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். நாங்கள் பாவிகள்.. ஆனால் நாங்கள் எப்போதும் உங்களை பின்பற்றுபவர்கள். அல்லாஹ்வின் பொருட்டு எங்கள் மீது கருணை காட்டுங்கள். உங்கள் கருணையின் ஒரு துளியையாவது நீங்கள் தந்தால் நாங்கள் வெற்றி பெறுவோம். ஓ காபாவின் ஆண்டவேர இந்த நாட்டைப் பாதுகாத்து, எங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க எங்களுக்கு வலிமை அளிக்குமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம்'' என்றார்.
இதன்மூலம் பாகிஸ்தான் எம்பி தாஹிர் இக்பால் தங்களின் ராணுவ பலத்தை நம்பவில்லை. அதோடு நாங்கள் பலவீனமாக இருக்கிறோம். பாவிகளாக இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் பேசிய இந்த காணொளி தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *