இடைநிலைப்பள்ளிக் கல்விச் சட்டம் திருத்தம் செய்யப்படும்! கல்வி அமைசர் FADHLINA SIDEK!

- Sangeetha K Loganathan
- 19 Jun, 2025
ஜூன் 19,
இடைநிலைப்பள்ளிக்கான கல்விச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek இன்று அறிவித்தார், முக்கியமாக இடைநிலைப்பள்ளிக் கல்விச் சட்டத்தில் இந்த திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இடைநிலைப்பள்ளிக் கல்விச் சட்டம் 1996 இல் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் முக்கிய அம்சங்களைச் சேர்த்து திருத்தம் செய்யப்படவிருப்பதாகவும் Fadhlina Sidek தெரிவித்தார்.
மலேசியாவில் அடிப்படைக்கல்வி இடைநிலைப்பள்ளிக் கல்வி வரையில் இருப்பதை இந்த கல்விச் சட்டத்திருத்தம் உறுதிச்செய்யப்படவிருபதாகவும் முக்கியமாகக் கட்டாய இடைநிலைக் கல்விக் கொள்கையிலும் திருத்தங்கள் செய்யபடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலர் பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையிலானக் கல்விச் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டிய தேவை இருப்பதால் இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதாகவும் ஜூலை 21 முதல் ஆகஸ் 28 வரையில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்த கட்டாயக் கல்விச் சட்டத் திருத்தங்கள் விவாதிக்கபடும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.
Kementerian Pendidikan akan meminda Akta Pendidikan Sekolah Menengah 1996 bagi mengukuhkan dasar pendidikan wajib sehingga peringkat menengah. Menteri Pendidikan Fadhlina Sidek menyatakan pindaan ini akan dibentang dalam sidang Parlimen mulai 21 Julai.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *