ஆஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மலேசிய தொழிலாளி நீதமன்றத்தில் ஆஜர்!

- Shan Siva
- 04 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 4: ஆஸ்திரேலியப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள ஒரு பகுதிநேர ஹோட்டல் தொழிலாளி இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
நீதிபதி ஜுரைடா
அப்பாஸ் முன் மனு தாக்கல் செய்த 25 வயதான எஸ். பிரசாந்த், தனக்காக ஒரு வழக்கறிஞரை நியமிக்க அவகாசம் கோரியதாக பெர்னாமா செய்தி
வெளியிட்டுள்ளது.
ஜூன் 28 ஆம் தேதி
காலை 5.20 மணி முதல் காலை 6 மணி வரை மவுண்ட் எர்ஸ்கைனில் உள்ள ஒரு பகுதியில்
காரில் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, உலோக கத்தரிக்கோலைக்
காட்டி பயமுறுத்தியதாக பிரசாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தண்டனைச்
சட்டத்தின் பிரிவு 376(2)(b) இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை
விதிக்கப்படும்.
அதே நேரத்தில் பெண்ணின்
சம்மதமின்றி இயற்கையின் ஒழுங்கிற்கு எதிராக உடலுறவு கொண்டதாகவும் அவர் மீது
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக்குற்றத்திற்கு
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377C
இன் கீழ், ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை
விதிக்கப்படும்.
மலேசியாவிற்கும்
ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவு நிலை மற்றும் குற்றத்தின்
தீவிரத்தன்மை கருதி எந்த ஜாமீனும் வழங்கவில்லை.
இந்த விஷயம் மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மோசமான தோற்றத்தை ஏற்படுத்துவதை தாங்கள் விரும்பவில்லை. இதுபோன்ற குற்றங்களை தாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நோர்டின் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *