மலேசிய விசா தொடர்பாக கனடா பிரதமருடன் அன்வார் பேச்சுவார்த்தை

- Shan Siva
- 04 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 4: மலேசிய குடிமக்களுக்கான விசா விலக்குகளை
மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கனடா பிரதமர் மார்க் கார்னியை தொடர்பு கொண்டு
வலியுறுத்தியுள்ளார். தற்போது, சுற்றுலா,
படிப்பு அல்லது வேலைக்காக கனடாவுக்குச் செல்ல
மலேசியர்களுக்கு விசா தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
மக்களிடையேயான
தொடர்புகளை மேம்படுத்தவும், பரந்த பலதரப்பு
பரிமாற்றங்களை வளர்க்கவும் மலேசியாவின் விசா மற்ற காமன்வெல்த் நாடுகளுடன் இணைப்பதன்
முக்கியத்துவத்தை அன்வார் எடுத்துரைத்தார். பாரிஸுக்கு அதிகாரப்பூர்வ விஜயம்
செய்தபோது தமது X இல் ஒரு பதிவில்
இதைப் பகிர்ந்து கொண்டார்.
கனடாவில் லிபரல்
கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றிக்காக அன்வார் கார்னியை வாழ்த்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *