விபத்தில் கவிழ்ந்த AMBULANS! உதவி மருத்துவர் காயம்!

top-news

ஜூன் 20,


கட்டுப்பாட்டை இழந்த அரசு மருத்துவமனை AMBULANS விபத்துக்குள்ளானதில் உதவி மருத்துவர் காயமடைந்ததாகவும் AMBULANS ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.45 மணிக்கு விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 8 மீட்புப் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Tangga Batu மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் I Mohamed Azuani Mat Yusof தெரிவித்தார். 

Kampung Laya Luboh குடியிருப்புப் பகுதியில் பாதிக்கப்பட்ட நோயாளிக்காக மலாக்கா மருத்துவமனையிலிருந்து நோயாளியின் வீட்டுக்குச் செல்லும் போது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய உதவி மருத்துவர் மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 40 வயது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் Tangga Batu மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் I Mohamed Azuani Mat Yusof தெரிவித்தார்.


Sebuah ambulans hilang kawalan dan terlibat dalam kemalangan semasa menghantar pesakit.Jabatan Bomba Tangga Batu menyatakan bahawa seorang pembantu perubatan cedera manakala pemandu hanya mengalami luka ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *