நில ஆக்கிரமிப்பு விவகாரம்- இதுவரை 60 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், மே 3-

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி போலீசார் மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் இதுவரை அறுபது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் அந்நியர்களும் அடங்குவார்கள்.

தற்போது நடைபெற்றுவரும் ஒரு விசாரணையின் தொடர்பில் கடந்த மாதம் 9ஆம் தேதியன்று எம்ஏசிசி அதிகாரிகளிடம் பகாங் மாநில அமலாக்கப் பிரிவினரும் மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை தொடர்பில் மொத்தம் 59 புலன்விசாரணைக் கோப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒஸ்மான் தெரிவித்தார்.

மொத்தம் 105 பல்வேறு வகையான வாகனங்கள் மற்றும் 622 சாதனங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தை மீறி நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம். ரவூப்பில் மட்டுமல்லாது இதர மாவட்டங்களிலும் இத்தகைய செயல்கள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளும்போது அவர்களுக்குச் சினமூட்டும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமென்று அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் யஹாயா வேண்டுகோள் விடுத்தார்.

Polis telah menahan 60 individu, termasuk warga asing, sejak Ogos lalu dalam operasi melawan pencerobohan tanah. Sebanyak 59 fail penyiasatan dibuka, dan 105 kenderaan serta 622 peralatan dirampas. Polis memberi amaran akan tindakan tegas terhadap pelanggar undang-undang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *