டத்தோஸ்ரீ பழனிவேல் மறைவுக்கு தான்ஸ்ரீ குமரன் இரங்கல்!

- Muthu Kumar
- 18 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 18-
ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேலின் மறைவுச் செய்தி வருத்தமளிப்பதாக குறிப்பிட்ட தான்ஸ்ரீ க.குமரன், அவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், சுற்றத்தினருக்கும் தமது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். ம.இ.கா.வின் எட்டாவது தலைவராக குறுகிய காலமே பொறுப்பில் இருந்த காலத்தில் கட்சியை நடத்துவதில் பல வழக்குகளையும், சர்ச்சைகளையும், சவால்களையும் எதிர்நோக்கி கட்சியை நடத்தியவர் டத்தோஸ்ரீ கோ.பழனிவேல்.
தமது இருபதாம் அகவையில் பினாங்கு ம.இ.கா. ஜெலுத்தோங் கிளையில் அடியெடுத்து வைத்த இவர், துன். ச.சாமிவேலுவின் ஊடகச் செயலாளராக பொறுப்பேற்றபின் அவருடைய நம்பிக்கைக்குரிய ஒருவராக வளரத்தொடங்கினார். அரசியலிலும் அரசாங்கத்திலும் பல பொறுப்புகளும் பதவிகளும் அவரைத் தேடிவந்தன. 1990-2008ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐந்து பொதுத்தேர்தல்களிலும் உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டு நான்கு முறையும் 2013 ஆம் ஆண்டில், பகாங் கேமரன் மலைத் தொகுதியில் ஒருமுறையும் வெற்றிபெற்றதுடன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் நீண்டகாலம் நாடாளுமன்ற
உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அரசாங்கத்தில், நாடாளுமன்ற செயலாளர், துணை அமைச்சர், அமைச்சர் பொறுப்புகளில் இருந்துள்ள என்ற பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர் அமைச்சரவையில் இருந்தபோதுதான். இந்தியர்களுக்கான சீட் திட்டம் உருவாக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பதிவாகும் என்று குறிப்பிட்ட தான்ஸ்ரீ குமரன். இத்திட்டமே பின்னாளில் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்றுத் திட்டம் உருவாக பிள்ளையார் சுழி போட்டது.
ம.இ.கா. தலைமைப் பொறுப்பினை குறுகிய காலமே ஏற்றிருந்தவர். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டு ஆரவாரமில்லாமல் அரசியல் நடத்தியவர். அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற தம்மை அழைத்து ம.இ.கா. தேசிய பேரவையின் சபாநாயகராக பணியாற்ற கொடுத்த வாய்ப்பை
நன்றியுடன் நினைவு கூர்வதாக குறிப்பிட்ட தான்ஸ்ரீ குமரன் அவரது ஆதன் அமைதியுற இறையருளை வேண்டுவதாகக் குறிப்பிட்டார்.
Bekas Presiden MIC, Dato' Sri G. Palanivel meninggal dunia. Tan Sri K. Kumaran merakamkan takziah kepada keluarga. Palanivel pernah berkhidmat sebagai Menteri dan Ahli Parlimen, serta berjasa dalam memperkenalkan pelbagai inisiatif untuk masyarakat India.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *