சரவாக் முதல்வர் துணைவியார் காலமானார்!

- Shan Siva
- 23 Jun, 2025
கூச்சிங், ஜூன் 23: சரவாக் முதல்வர் டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஒபெங்கின்
துணைவியார் Puan Sri Juma’ani Tuanku Hj Bujang இன்று அதிகாலை 3.34 மணியளவில்
காலமானார். அவருக்கு வயது 76.
சரவாக் பிரீமியர் துறையின் (கார்ப்பரேட் விவகாரங்கள், தகவல் மற்றும் சரவாக் பொதுத் தொடர்பு பிரிவு) துணை அமைச்சர் டத்தோ அப்துல்லா
சைடோல் வாட்ஸ்அப் செய்தி மூலம் ஜுமானி காலமான செய்தியை தெரிவித்தார்.
பெட்ரா ஜெயாவில்
உள்ள மஸ்ஜித் ஜமேக்கில் காலை 10 மணி முதல்
மதியம் வரை இறுதி மரியாதை நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து பெட்ரா ஜெயாவில் உள்ள செமரியாங் முஸ்லிம்
கல்லறையில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றும் அப்துல்லா கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *