KL - ஈப்போ சாலையில் விபத்து! இருவர் உயிர்தப்பினர்

top-news
FREE WEBSITE AD

உலு சிலாங்கூர், மே 3: செரெண்டா அருகே கோலாலம்பூர்-ஈப்போ சாலையில் கிலோமீட்டர் 39 இல் நேற்று மூன்று வாகனங்கள் மோதிய பயங்கர விபத்தில் ஒரு பெண்ணும் ஆணும் உயிர் தப்பினர்.

 நேற்று பிற்பகல் 4.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், புரோட்டான் சாகா, ஒரு டிரெய்லர்  மற்றும் ஒரு டேங்கர் லாரி ஆகியவை இதில் சிக்கியதாகவும் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் அஸ்ரி முகமட் யூனுஸ் தெரிவித்தார்.

31 வயது பெண் ஓட்டிச் சென்ற கார், செலாயாங்கிலிருந்து பத்தாங்காலிக்கு சென்று கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த இடத்தை அடைந்ததும், புரோட்டான் சாகாவை 57 வயது நபர் ஓட்டிச் சென்ற டேங்கர் லாரி பின்னால் மோதியது.

இந்த மோதலின் காரணமாக கனரக வாகனம் எதிர் பாதையில் சென்று டிரெய்லரில் மோதியது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஓட்டுநர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை முகமட் அஸ்ரி உறுதிப்படுத்தினார்.

விபத்து குறித்து சாட்சிகள் அல்லது தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுகொண்டார்!

Tiga kenderaan terlibat dalam kemalangan di KM39, Serendah – melibatkan sebuah kereta, treler dan lori tangki. Kemalangan berlaku akibat pelanggaran dari belakang, namun tiada kecederaan dilaporkan. Polis mohon saksi tampil bantu siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *