RM4 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருளுடன் ஆடவர் கைது! – கெடா

- Sangeetha K Loganathan
- 18 Feb, 2025
பிப்ரவரி 18,
சுங்கை பெட்டானியில் உள்ள வணிகக் கடையில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த 46 வயதான உள்ளூர் ஆடவரைக் கைது செய்துள்ளதாகக் கெடா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Fisol Salleh தெரிவித்தார். வணிகக் கடையிலும் வாகனத்திலும் போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அதன் மதிப்பு RM4 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சோதனையில் 51 கிலோ syabu வகை போதைப்பொருளும் 14.9 கிலோ எடையிலான ecstacy மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மலேசியா வழியாக வெளிநாட்டுக்குக் கடத்த முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கெடா மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Fisol Salleh தெரிவித்தார்.
Polis Kedah menahan seorang lelaki tempatan berusia 46 tahun di Sungai Petani kerana menyimpan dadah bernilai RM4 juta di premis perniagaan dan kenderaannya. Serbuan menemui 51kg syabu dan 14.9kg pil ecstasy yang dipercayai diseludup ke luar negara. Suspek direman tujuh hari untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *