வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது!

top-news

மே 2,

சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் பெண்ணின் கைப்பையை அபகறிக்க முயற்சிக்கும் மோட்டார் சைக்கிள் தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 2 உள்ளூர் இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். ஜொகூர் ஸ்ரீ அலாம் மாசாய் சாலையில் இந்த வழிப்பறி சம்பவம் கடந்த புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட 2 இளைஞர்களும் நேற்று மாலை 6.20 மணிக்கு அதே ஸ்ரீ அலாம் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயது 35 வயது உள்ளூர் இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். வழிப்பறி செய்ததாக நம்பப்படும் பல்வேறு பொருள்கள் அவர்களிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dua remaja tempatan berusia 23 dan 35 tahun ditahan selepas cuba meragut beg tangan seorang wanita di jalan Masai, Seri Alam. Rakaman kejadian tular di media sosial, dan pelbagai barangan dipercayai hasil jenayah turut dirampas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *