டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மறைவுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

- Muthu Kumar
- 19 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 19-
ம.இ.கா. முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மறைவுக்கு அரசியல், சமுதாய இயக்கத் தலைவர்கள் நேற்று அவரின் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
நேற்று டத்தோஸ்ரீ பழனிவேல் இல்லத்திற்கு வருகை தந்த துணைப்பிரதமரும் அம்னோ தலவைருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி, பழனிவேல் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்திற்கும் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், முன்னாள் துணை அமைச்சர் டான்ஸ்ரீ க.குமரன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், மைபிபிபி தலைவர் டத்தோஸ்ரீ லோகபாலா, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன், டத்தோ டி.மோகன்.தாமரை குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா இராமலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே பழனிவேலின் இளைய மகன் சரவண வேல் கூறுகையில், நாட்டிற்கு சிறந்த அரசியல்வாதியாக சேவையாற்றியது மட்டுமின்றி குணத்தாலும் பண்பாலும் நல்ல தந்தையாக, பிள்ளைகளுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்வதில் காலஞ்சென்ற டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் என்றும் தவறியதில்லை.
சிறு வயதில் தந்தையோடு மீன் பிடிக்கச் செல்வது, நீண்ட நேரம் அவரோடு நேரம் செலவிடுவது போன்ற தருணங்களை மீண்டும் நினைவுகூரும் பொழுது, நெஞ்சம் கனப்பதாகச் சொன்னார்.."ஆக, என்னுடைய தந்தை இயல்பாகவே மிகவும் பண்பானவர், நட்புடன் பழகுவார். எனக்கும் என் அண்ணன்களுக்கும் சிறந்த முன்மாதிரியாக இருந்தவர். சமுதாயத்திற்கும் அவர் நல்ல சேவையை வழங்கியிருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன்.
அனைத்து ஆதரவுகளையும் பார்க்கும் பொழுது அனுதாபங்களைத் தெரிவித்த, பிரார்த்தனை செய்து கொண்ட மலர்வளையங்களை அனுப்பிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த ந நன்றி என்று சரவண வேல் கூறினார்.இதனிடையே, முன்னாள் மஇகா தலைவரான டத்தோஸ்ரீ பழனிவேலின் நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, இன்று செந்தூல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Pemimpin politik dan masyarakat memberikan penghormatan terakhir kepada mendiang Dato Seri G. Palanivel. Anak beliau, Saravanan Vell, menyatakan ayahnya seorang bapa penyayang dan pemimpin berwibawa. Jenazah akan dibakar di krematorium Sentul hari ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *